காங்கிரஸ் தற்காப்பு நிலைக்குச் செல்கிறது
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]சு[/dropcap]வாமி தன் தொடர் தாக்குதல்களை ஏற்றிக் கொண்டே வருகையில், தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸும் இடது சாரிகளும், இங்கும் அங்கும் அலை பாய்கின்றனர்.
ராஜ்ய சபாவில் நுழைந்த மூன்று நாட்களுக்குள்ளாகவே சுப்ரமணியம் சுவாமி திசையை மாற்றியுள்ளார், அதுவரை காங்கிரஸும் இடது சாரிகளுமே கோலோச்சி வந்தனர். தன்னுடைய இரண்டாவது நாளான 27 ஏப்ரலில் தன்னுடைய முதல் உரையிலேயே சுவாமி காங்கிரஸ் தலைமைக்கு அதிர்வலைகள் தந்துள்ளார். அகஸ்டாவெஸ்ட்லாண்ட் பேரத்தில் சோனியா காந்தியைப் பெயரிட்டுச் சொல்ல (மற்றவர்களைப்போல) சிறிதும் வெட்கமோ தயக்கமோ காட்டவில்லை.
பார்லிமெண்டரி விவகாரத் துறை அமைச்சர், காங்கிரஸ் எம்பிக்களைச் சரியாகவே எச்சரித்தார். “சுவாமியிடம் விளையாடாதீர்கள். நீங்கள் தந்திரங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்.” அடுத்த நாளும் சற்றும், கட்டுப்படுத்த முடியாத சுவாமி, சபையில் எழுந்து, சாப்பர் ஊழல் பற்றிய விவாதத்திற்கான தனது குறிப்புரையை சபைத்தலைமைக்கு நினைவு கூர்ந்தார். சம்பந்தப்பட்ட கம்பெனி இந்திய ஊடகத்தைச் ‘சமாளிக்க’ ஆறு மில்லியன் யூரோவைச் செலவழித்ததை அம்பலப்படுத்தினார். இதனால் காங்கிரஸ் கிளர்ந்தெழுந்தது.
வெள்ளிக் கிழமை ஏப்ரல் 29ல், சுவாமி அசாத்திற்கு ஒரு அதிர்ச்சி தந்தார்.
ஆபத்தை உணர்ந்த உதவி சபாநாயகர் பி. ஜே. குரியன், இந்த விஷயத்தை சர்ச்சைக்கு விடும் தீர்மானம், இந்திய துணைக் குடியரசுத்தலைவரும் ராஜ்யசபா சபாநாயகருமான ஹமீத் அன்சாரிக்கு விடப்பட்டது என்றார். விஷயம் இதோடு முடிந்ததாக எல்லோரும் நினைத்தனர். ஆனால் சுவாமிக்கு இன்னொரு அதிர்ஷ்ட சந்தர்ப்பம் கிடைத்தது. அலிகார் பல்கலைக் கழகத்திற்கு மைனாரிடி அந்தஸ்து நிலைக்கச் செய்வதைப் பற்றிய பேச்சில் இன்னொரு எம்.பி, சுவாமியின் பெயரைக் குறிப்பிட்டார். சந்தர்ப்பத்தைப் பிடித்துக் கொண்ட சமர்த்தரான சுவாமி எழுந்து நின்று தன்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதற்கு விளக்கம் கோரினார்.
இந்திய அரசியல் சட்டப்படி, அரசாங்கம் மைனாரிட்டி கல்வியமைப்பிற்கு நிதி தர முடியாது என்றும் மேற்படி பல்கலைக்கழகம் ஒரு மத்திய பல்கலைக் கழகமானதால், மற்றவைகளைப் போலவே, விதிகளுக்குக் கட்டுப்பட்டது என்றும் கூறினார். காங்கிரஸிலிருந்து ஒருவர், இந்திய அரசியல் சட்டத்தின் எந்தப் பகுதியை சுவாமி கூறுகிறார் எனக் கேட்டுக் கின்டலடிக்க முயன்றார். இது காங்கிரஸ் தரப்பிற்கு மோசமாகப் போய்விட்டது. சுவாமி பதிலளிக்கையில், “நான் இந்திய அரசியல் சட்டத்தைப் பேசுகிறேன். இத்தாலிய சட்டத்தை அல்ல. உங்களுக்கெல்லாம் இத்தாலிய சட்டம்தான் தெரியும்.”
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]தா[/dropcap]க்கமடைந்த காங்கிரஸ், உடனே குதித்து சபையை முற்றுகையிட்டு அமளி செய்ய ஆரம்பித்தது. சுவாமியை காங்கிரஸ், அமெரிக்க CIA ஏஜண்ட் என்று அழைத்தது, அவரும் பதிலுக்கு அவர்களை ISI மற்றும் KGB ஏஜண்டுகள் என்றழைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் சுவாமிக்கு எதிரில் போர்க் கொடி தூக்கினார்; தாக்குதல் நடத்தினார்: சுவாமி தெருச் சண்டை மொழியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் பார்லியமெண்ட் நடவடிக்கைகளைச் சிதைப்பதற்காகவே ஏற்பட்ட BJPன் புதுப்பரிசு என்றும் கூறினார்.
குரியன் சுவாமியை உட்காரச் செய்தார். ஆனால் அவரின் வார்த்தைகள் ‘சோனியா’ ‘இத்தாலியன்’ என்பவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தபின் தான் உட்கார்ந்தார் சுவாமி.
வெள்ளிக் கிழமை ஏப்ரல் 29ல், சுவாமி அசாத்திற்கு ஒரு அதிர்ச்சி தந்தார். சாப்பர் கம்பெனியை கருப்புப் பட்டியலில் சேர்த்ததைப் பற்றிய பொய்யான தகவலை சபைக்குத் தந்தததற்காக உரிமைப் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்தார். ஆவணப்பதிவின் படி, அகஸ்டாவெஸ்ட்லாண்ட்டை கருப்புப் பட்டியலில் ஜூலை 3, 2014ல் சேர்த்தது NDA அரசாங்கம் தான்.
சுவாமியின் நுழைவிற்குப் பிறகு, முன்பு எப்போதும் தாக்கும் நிலையில் விளையாடிக் கொண்டிருந்த காங்கிரஸ், தற்போது தற்காப்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஒவ்வொரு தடவையும் சுவாமி பேச எழும்போது, காங்கிரஸ் குழந்தைத் தனமான முறையில் சத்தமிட்டு அவரைப் பேசவிடாதிருக்க முயற்சிக்கிறது. வெள்ளிக் கிழமை சபை ஒரு காட்சி கண்டது; அன்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தன் மனுவை எடுக்கச் சொல்லிக் கோரினார், ஆனால் எந்த விதியின் கீழ் அதை தாக்கம் செய்திருந்தார் என்பதைச் சொல்லத் தெரியவில்லை! இதனுடன் இணைந்துள்ள வீடியோ இதையெல்லாம் கூறுகிறது. அரசாங்கத்தைத் தாக்கத்திட்டமிட்டுள்ள காங்கிரஸ், இப்போது கட்சித்தலைவர் சோனியாவுக்கு எதிரான சுவாமியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் அவசியத்திற்குத் தள்ளப்பட்டுள்து. சோனியாவும் அகமது படேலும் பேட்டிகள் கொடுப்பதும் பட்டி தொட்டி நிறுவனங்களுக்கெல்லாம் விளக்கப்பேச்சுகள் கொடுப்பதும் ஒன்றே போதும்- அகஸ்டாவெஸ்ட்லாண்ட் விவகாரம் எவ்வளவு கடுமையானது என்பதை விளக்க.
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””]ஒ[/dropcap]ன்று நிச்சயம். சுவாமியின் பிரவேசம் BJPயை உற்சாகப்படுத்தி உள்ளது. சபையின் நோக்கமே மாறியுள்ளது, சுவாமி சோனியாவையும் அவரின் குடும்பத்தாரையும் எவ்வாறு தாக்குவது சமாளிப்பது என்பதைக் காட்டியுள்ளார். ‘லுட்யின் காக்டெயில் பார்ட்டித் தலைவர்கள்’ (Lutyen’s cocktail party leaders) எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில், பார்லியமெண்டில் உள்ள எந்த BJP உறுப்பினரும் காந்தி குடும்பத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்க முயன்றதில்லை. 2011 மார்ச்சில் வெளிப்பட்ட வத்ரா நில அபகரிப்பு வழக்குகள் பற்றி பார்லியமெண்டின் பாஜக தலைமை ஒரு வருடம் மௌனம் காத்தது.
அடுத்த புதன் கிழமை (மே 4ல்) ராஜ்யசபா சாப்பர் ஊழலைப் பற்றி சர்ச்சை செய்யப்போகிறது. இது இதுவரை மிக முக்கியமான நடைபெறும் சர்ச்சைகளுள் ஒன்றாக இருக்கக் கூடும் – ஏனெனில் சுவாமி சில ருசியானத் தகவல்களைக் கூற உள்ளார். பார்வையாளர் தர வரிசையில் ராஜ்யசபா தொலைக்காட்சி உச்சத்தைத் தொடவுள்ளது.
- இஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம் - May 3, 2018
- வங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்…. - November 24, 2016
- அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்ன? ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர். - November 2, 2016
Interesting article.
இது வரை சுப்பிரமணிய சுவாமியை பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் செய்தவர்களுக்கு பெரிய பீதியை ஏற்படுத்தி விட்டார்