[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]ம[/dropcap]காபாரதத்தில், வருமான வரி எதிர்ப்பு மூலமாக, கிருஷ்ணன் கம்சனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். கோகுலம் வாழ்மக்களை கம்சன் விதித்த வருமான (கார்) வரியை செலுத்த வேண்டாம் என்று ஊக்குவிதித்தார். கோகுலத்துக்கும் மதுரா அரசாங்கத்திற்கும் நடந்த தொடர் போரில், கம்சன் கிருஷ்ணனின் கரத்தால் மடிந்தான். அமெரிக்காவின் பிறப்பே இதே போன்ற வருமான வரி நிராகரிப்பு நிகழ்ச்சியின் மறுவடிவமாகியது. 1765ல் அமெரிக்கக் காலனிக் குழு அமெரிக்க மக்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்த வரிகளை நிராகரித்தது. இந்தச் சண்டையே பெருவடிவமெடுத்து பிரிட்டிஷ் அரசின் தோல்விக்கும் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கும் 1776ல் வழிவகுத்தது. 1776 முதல் 1913 வரை, அமெரிக்கா ஒரு வல்லரசாக அசுர வேகத்தில் வளர்ந்த போது, அந்நாட்டில் வருமானவரி கிடையாது. (கார்ப்பரேட் குழுமங்களின் லாபங்களே வரிவிதிக்கப்பட்டன).
இந்திய அரசாங்கம் மகாபாரதத்திலிருந்து படிப்பினை கற்க வேண்டும், டாக்டர் சுப்பிரமண்யன் சுவாமி கூறுவது போல் வருமான வரியை முற்றிலும் விலக்க வேண்டும்.
மக்கள் சம்பாத்யம் அவரவர்கள் கைகளிலேயே விடப்பட்டன. அவர்கள் சுதந்திரமாகத் தங்களின் வருமானத்தை அவரவர் விருப்பத்திற்கேற்ப செலவு செய்ய முடிந்தது.
கோகுல வாழ் மக்களை வரிசெலுத்த வேண்டாமென்று கிருஷ்ணன் கூறும்போது காரணத்தைச் சொன்னார். கம்சன் ஒரு அரசனாகிய தன் கடமையைச் செய்ய மறுத்துவிட்டான், கோகுலக் குடிமக்களின் உயிரையும் உடைமையும் பாதுகாக்கத் தவறிவிட்டான். அரசனாகிய பரதன் ஒரு அரசாங்கக் (அரசரின்) கடமையை வகைப்படுத்துவதிலிருந்து மகாபாரதம் தொடங்குகிறது. தன்னுடைய ஒன்பது மகன்களில் யாருக்கும் அரியணை அளிக்காத தன் தீர்மானத்தைப் பற்றிக் கூறுகையில், பரதன் ஒரு அரசரின் மூன்று பொறுப்புகளை விவரித்தார், மற்றும் அவைகளே அரசரின் கடமைகள் என்றார். முதலாவது- குடிமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்தல், இரண்டாவது- மக்களுக்கு உரிய நியாயம் வழங்குதல், மூன்றாவது- தனக்குப் பிறகு ஆட்சி நடத்தத் தகுதியானவரை அறிவிப்பது.
பரதன் அரசாங்க சொத்துக்களை மறுவிநியோகம் செய்வதைப் பற்றிப் பேசவே இல்லை. இந்தக் கொள்கையை முற்றிலும் துரியோதனன் மீறினான். அரசாங்கக் கருவூலத்திலுள்ள பொற்காசுகளை அஸ்தினாபுரத்து மக்களுக்கு வழங்கினான். பாண்டவர்கள் மீதான தன் அச்சத்தைப் போக்க பெருவாரியான மக்களின் ஆதரவைத் திரட்ட முயன்றான். மறுவிநியோகத்தின் மூலம் ஒரு அரசாங்கம் மக்கள் மீதுள்ள தன் அவநம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]1[/dropcap]930ம் ஆண்டு முதலான ஐக்கிய ஜனநாயக அரசின் பங்காக, அமெரிக்கா ‘குறைந்த வரி’ ‘அளவான அரசாங்கம்’ என்ற தன் கொள்கைகளை விடுத்து, துரியோதனின் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. 2008ல் வால் ஸ்ட்ரீட் மார்கெட் சூதாட்டக் கம்பெனிகளை வேண்டிய மட்டும் அனுமதித்துவிட்டு, தம்முடைய ஏழு முன்னோர்கள் அமைத்த அரசியல் சட்ட அடித்தளத்தையே உருக்குலைத்தது. வெளிப்படையாகவே வங்கிகள் தங்கள் கடன் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அரசன் பரதன் நியமித்த அடிப்படை நல்லரசுக் கொள்கைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு நிறைந்தவர்கள் முன்னிலையிலேயே, ஐந்து மாவீரர்களின் மனைவி திரௌபதியை துச்சாதனன் துயிலுரிக்க முயன்ற செய்கைக்கு ஒப்பானதே இது.
இந்திய அரசாங்கம் மகாபாரதத்திலிருந்து படிப்பினை கற்க வேண்டும், டாக்டர் சுப்பிரமண்யன் சுவாமி கூறுவது போல் வருமான வரியை முற்றிலும் விலக்க வேண்டும். மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள மூன்று முக்கிய கடமைகளை, இந்திய மக்கள் மீது வருமானவரி சுமத்தாமலேயே, அரசாங்கம் நன்கு ஆற்ற முடியும்.
வருமானவரியை விலக்குவது மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பை மேம்படுத்தும் முனைப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள இதைத் தொடர்ந்துள்ள இரண்டு புதினங்கள் சிபாரிசு செய்யப்படுகின்றன. ‘ரிபப்ளிக் ஆப் காசியாபாத் – பார்ட் 1’ (Republic of Ghaziabad – Part 1) என்ற கட்டுரை, வருமானவரி என்பது எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்கின்றது என்பதைச் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியுள்ளது. ‘ப்ரேகிங் தி ஒன் ஷாகிள் ஆஃப் தி ஃபேடல் கன்ஸீட்’ (Breaking one shackle of the fatal conceit) என்ற கட்டுரை, ஒரு உதாரணத்தின் மூலம் இந்தியாவை 70 வருடங்களில் ஏழ்மையிலேயே சிக்க வைத்துள்ள ஒரே மாதிரி தவறுகளை இந்திய அரசாங்கம் எவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறது என்பதை விளக்குகிறது.
- இஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம் - May 3, 2018
- வங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்…. - November 24, 2016
- அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்ன? ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர். - November 2, 2016