ஹோட்டல் அபகரிப்பு – பி.சிதம்பரம் ஐ.ஓ.பி. வங்கி கூட்டுத் தில்லு முல்லு – பாதிக்கப்பட்ட வர்த்தகர் சிபிஐ யில் புகார்

அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் கதிர்வேல் குற்ற மனு தாக்கல்

அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் கதிர்வேல் குற்ற மனு தாக்கல்
அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் கதிர்வேல் குற்ற மனு தாக்கல்

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]மிழ் நாட்டிலுள்ள வணிகர் ஒருவர், கடந்த வாரம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராகப் சி.பி.ஐ யில் ஒரு புகார் மனுதாக்கல் செய்துள்ளார். திருப்பூரில் உள்ள தன்னுடைய உணவகத்தை, ப.சிதம்பரம், அவர் மனைவி நளினி குடும்பத்தார், மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் (IOB) மேலதிகாரிகள் இணைந்து பறித்துக் கொண்டனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்னர், இந்தப் புகாரை CBI தமிழ் நாட்டுக் கிளையில் பதிவு செய்ய அவர் முயற்சித்தார். ஆனால் தமிழ்நாட்டுக் கிளை அதை பதிவு செய்ய மறுத்துவிட்டது; இதன் காரணமாக நேரடியாக CBIன் இயக்குநரிடமே அந்த அவர் புகார் மனு தாக்கல் செய்தார். அவர் பெயர் கதிர்வேல்.

இதைச் சிதம்பரத்தின் மனைவி நளினியின் சகோதரி பத்மினி, IOBன் மேலதிகாரிகள் உதவியுடன் கையகப்படுத்திக் கொண்டார்.

கதிர்வேலுக்கு சுமார் 45 வயது அல்லது அதற்கு சற்று மேல் இருக்கலாம், ஓட்டல் தொழில், கோழிப் பண்ணை, கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலைத் தென்மாநிலங்களில் செய்து வருகிறார். அவருடைய குற்ற மனுப்படி, 2007ல் திருப்பூரில் உள்ள ‘கம்ஃபோர்ட் இன்’ (COMFORT INN) என்ற ஓட்டலில் அவர் ஒரு பங்குதாரர். இதைச் சிதம்பரத்தின் மனைவி நளினியின் சகோதரி பத்மினி, IOBன் மேலதிகாரிகள் உதவியுடன் கையகப்படுத்திக் கொண்டார். இந்த ஓட்டலின் மதிப்பு ரூ 10 கோடிக்கும் மேல். இந்த ஓட்டல் பெயரில் சுமார் இரண்டரைக் கோடி ஐ.ஓ.பி.யில் கடன் உள்ளது. எனவே கடன் வராத நிலையில் ஓட்டலை முடங்கிய சொத்தாக (NON PERFORMING ASSET – NPA) ஐஓபி அறிவித்து, ஏல அறிவிப்பையும் செய்தது. அதனைத் தொடர்ந்து கதிர்வேல் சென்னை உயர்நீதி மன்றத்தையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தையும் (DEBT RECOVERY TRIBUNAL) அணுகி, 64 லட்சம் ரூபாய் IOB யில் கட்டி, ஏலத்தைத் தடுக்க முயன்றார். அப்போது மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

64 லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொண்ட IOB வங்கி ஏலத்தை ரத்து செய்து விடுவதாக உறுதி கூறியது. ஆனால் வேறு வகையில் ஏலத்தை செயல்படுத்தி நளினி சிதம்பதத்தின் சகோதரி பத்மினிக்கு நாலரைக் கோடி ரூபாய்க்கு ஓட்டலைக் கிரயம் செய்துவிட்டது. சொத்தின் மதிப்போ 10 கோடி. அதனைத் தொடர்ந்து பத்மினியின் அடியாட்கள் ஓட்டலில் நுழைந்து, வன்முறை மூலம் ஓட்டலைக் கைப் பற்றினார். இதனால் கதிர்வேல் முற்றிலும் ஏமாற்றப் பட்டார். சில வருடங்களுக்குப் பிறகு, ப.சிதம்பரம் அந்த ஓட்டலைத் திறந்து வைத்தார்.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ப்போதே அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் கதிர்வேல் குற்ற மனு தாக்கல் செய்தார். எனவே, IOB வங்கி அதிகாரிகள் பத்மினியிடம் ஓட்டலைக் கிரயம் செய்ததை எதிர்த்துள்ள கதிர்வேலின் மனுவைத் திரும்பப் பெறும்படி தன்னை மிரட்டியதாகக் கதிர்வேல் கூறுகிறார்; ‘கடன் செலுத்தும்’ வசூல், அறிக்கைகளை அனுப்பியும், அவருடைய மற்ற வியாபாரக் நிறுவனங்களுக்கு (கோழிப் பன்ணை உள்பட) நிதி உதவிகளை நிறுத்தியும் வங்கி அதிகாரிகள் அவரை ப்ளாக் மெயில் செய்தனர்.

மே 8, 2008ல் சிதம்பரம் கதிர்வேலுக்கு ஒரு கடிதம் எழுதினார. அதில் கதிர்வேலுடன் ஏற்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அது வேறு ஒரு தனியார் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் குறிப்பிட்டார். அந்த சம்பந்தப்பட்ட தனியார் வேறுயாருமல்ல சிதம்பரத்தின் மைத்துனி பத்மினியே. நளினி கதிர்வேலை அழைத்து 2.5 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும் மற்றும் ஓட்டலை மறந்து விடுமாறும் கூறியுள்ளார். அந்த 2.5 கோடி ரூபாய் காசோலையை நளினியிடமே திரும்பக் கொடுத்துவிட்ட கதிர்வேல் நீதி கோரி அதிகாரிகளின் கதவைத் தட்ட ஆரம்பித்தார்.

கதிர்வேல், தன் குற்ற மனுவில், சிதம்பரம், நளினி, பத்மினி, மற்றும் IOB வங்கியின் மேல் அதிகாரிகள் – சேர்மன் எஸ். ஏ. பட் உள்பட எல்லோர் மீதும் குற்றம் சுமத்தி…

இந்த கட்டுரையின் கடைசிப் பகுதியில், கதிர்வேல் தாக்கல் செய்த 82 பக்க குற்ற மனுவும் அதன் சார்புள்ள எல்லா ஆவணங்களின் நகல்களும் விவரங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ன; சிதம்பரம் மற்றும் நளினி கதிர்வேலுக்கு எழுதிய கடிதங்கள், போட்டோக்கள், வங்கி கணக்கு வரவு செலவுகள், ஆகியன IOBன் முறைகேடான அதிகார துஷ்பிரயோகத்தையும் காண்பிக்கின்றன; வங்கி அதிகாரிகள் எவ்வாறு நீதிமன்ற ஆணைகளையும் மீறி, வங்கிகளின் சட்டதிட்டங்களையும் மீறி, நிதி அமைச்சரின் மைத்துனி பத்மினியை ஓட்டலைப் கைப்பற்றுமாறு எவ்வாறு செய்து கொடுத்தனர், கள்ளத்தனமாகவும் பலவந்தமாகவும் எவ்வாறு உதவினர் என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.

[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”6px” class=”” id=””][/dropcap]ர்த்தகர் கதிர்வேல், தன் குற்ற மனுவில், சிதம்பரம், நளினி, பத்மினி, மற்றும் IOB வங்கியின் மேல் அதிகாரிகள் – சேர்மன் எஸ். ஏ. பட் உள்பட எல்லோர் மீதும் குற்றம் சுமத்தி தன் ஓட்டலைப் பறித்தது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது மற்றும் தன் வியாபார முழுவதையும் சிதைக்க முயற்சித்தது என எல்லாவற்றையும் குறிப்பிட்டு, தன் குற்ற மனுவைப் பதிவு செய்யுமாறு கோரியுள்ளார். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், கதிர்வேல் CBIன் தமிழ்நாட்டுக் கிளையை அணுகினார். இரண்டு வருடங்களாக (CBI) அவர்கள் எதையும் செய்யவில்லை. அவரை விசாரித்தார்கள், தகவல்களை ஏற்றுக் கொண்டார்கள், கதிர்வேலுக்கு (வெற்று) உறுதிகள் மட்டும் தந்தார்கள், அவ்வளவே. தற்போது தன் சட்ட வல்லுனர்களைக் கலந்தாலோசித்த கதிர்வேல் செப்டம்பர் 19, 2016ல் புதுதில்லியிலுள்ள CBI இயக்குனரிடம் குற்றமனு தாக்கல் செய்துள்ளார். இந்த 82 பக்க குற்ற மனுவும் ஆவண நகல்களுடன் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் மற்றும் குடும்பத்தாரின் வெட்ட வெளிச்சமான இந்த அதிகார துஷ்பிரயோகம் பற்றி மேல் நடவடிக்கையை CBI ஏன் எடுக்கவில்லை? கூண்டிலடைக்கப்பட்ட கிளி போன்ற CBIயை செயலாற்றும் படி அரசியல் தலைமை ஆணையிடுமா?

CBI Complaint Against Chidambaram by Kathirvel

We are a team of focused individuals with expertise in at least one of the following fields viz. Journalism, Technology, Economics, Politics, Sports & Business. We are factual, accurate and unbiased.
Team PGurus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here