[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]வே[/dropcap]லை வாய்ப்புகளைத் துரித கதியில் பெருக்குவதற்கும் இந்தியாவை இரண்டு இலக்க முன்னேற்றப்புள்ளியில் இட்டுச் செல்வதற்கும் செய்ய வேண்டுவது தான் என்ன? முதலில் வட்டி வீதத்தைக் குறைத்தல் நிச்சயம் பயன்தரும். திரு. ரகுராமன் ராஜன் ரிசர்வ் வங்கியிலிருந்து விலகுவதன் காரணமாக இது நடைபெற்றே ஆக வேண்டும். அடுத்த கட்டமாக மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகும். இது நடைபெற வேண்டுமானால், ஆணோ பெண்ணோ, தீர்க்கமாக யோசித்துச் செயல்படக் கூடிய ஒருவர் தேவைப்படுகிறார்.
புது நிதி அமைச்சர், வருமானவரியை பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வருவானவரி உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாய்க்கு உயர்த்த வேண்டும் அல்லது வருமான வரி வசூலிப்பையே டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கூறியது போல் நீக்கிவிட வேண்டும்.
மோடி அரசாங்கத்தின் இரண்டு வருட செயல்திறன் அளவீட்டின்படி, நிறைய அமைச்சகங்கள், வணிகம் செய்வதின் செலவினங்களைக் குறைத்துப் பாராட்டைப் பெற்றுள்ளன; வாணிபத்தைத் துவங்குவதற்குள்ள தடைகளைக் களைவதிலும், பொதுநலத்திட்டங்கள் எந்த சுரண்டலுமில்லாமல் மக்களை அடைவதிலும் வெற்றியடைந்துள்ளன. தரைவழிப் போக்குவரத்தும் நெடுஞ்சாலைத் துறையும் பாதியில் நின்று போன திட்டங்களை உயிர்ப்பித்துள்ளன. எரிசக்தித் துறை, மின்சக்தியைக் கட்டுப்படியான விலைக்கு கிடைக்க வழிசெய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் (LPg) சமயல்வாயுச் சலுகைகளைத் தானே துறக்கும் வழிமுறை மூலம் ஒரு வெளிப்படையான கூட்டு பேரத்தைக் கொண்டு வந்து, எரிசக்தி வாயு தடையின்றிக் கிடைக்கும் வகை செய்துள்ளது. மற்ற அமைச்சகங்கள் – தடையில்லா இணையத் தொடர்பு, திறமை பெருக்குதல், தூய்மையான பாரதம் மற்றும் சிறப்பு நகர திட்டங்களுக்காக முனைப்புடன் செயலாற்றுகின்றன. நாட்டினுடைய இலட்சியங்களை நிறைவேற்றுவதில் மோடியின் அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் தொய்வு நிலையைத் தவிர, மற்ற விஷயங்களில் தடையின்றி சீராக பணியாற்றி வருகின்றது.
நிதி அமைச்சகத்தின் இரண்டு வருடச் செயல்திறன் உப்பு சப்பில்லாமல் நடந்து வந்துள்ளது. முறைசாரா புதிய செயல் உத்திகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. முன்பிருந்த ஐக்கிய முன்னணியின் கொள்கைகளையே பல துறைகளிலும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்துள்ளது – கறுப்புப்பணத்தை மீட்டல், தங்கத்தை நாணயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தல், திட்டமிட்ட இலக்குகளை அடைய பொது நிறுவனங்களின் (PSU’s) ஆதாயப் பங்குகளை அதிகமாக்க வற்புறுத்தல், கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதிக பலனை பயனிட்டாளர்க்கு வழங்கத் தவறுதல், வரிவருவாயிலிருந்து பொதுவுடைமை வங்கிகளின் மூலதனத்தை மேம்படுத்தல் மற்றும் பதுக்கல் செய்யும் விற்பனையாளர்களைச் சோதனை செய்து விலையுயர்வைத் தடுத்தல் – இவை எல்லாவற்றிலுமே பழைய பின்னடைவு முறைகளே செயல்பாட்டில் இருந்து வந்துள்ளன. இந்த மூன்று பட்ஜெட்களும் வெற்று மணல்களாகவே இருந்து வந்துள்ளன. வரிசெலுத்தத் தவறியவர்கள் ஆனாலும் சரி, கறுப்புப்பணம் புழங்குவோராயினும் சரி, நிதித்துறை அமைச்சர் வாயளவில் வீரம் பேசிக்கொண்டு வந்துள்ளார், செயல் தன்மையோ குறைவே.
முறைதிறன் மாற்றிச் செய்வதை விட, பழையனவற்றையே கெட்டியாகப் பின்பற்றி வரும் அரசுத்துறை ஆட்சியாளரையே (Bureaucrats) ஒரு நிதி அமைச்சர் சார்ந்திருப்பது இந்தியாவின் துரதிருஷ்டம். நிதி அமைச்சகம் செல்லும் பாதை உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டியது அவசியமே. தற்போதைய நிதி அமைச்சரை விலக்கி, பாஜக தேர்தல் உறுதிகளைச் செயலாக்கம் பெற, மற்றும் சீர்திருத்தங்களை மக்களுக்கு வழங்கும் ஆற்றல் கொண்ட, ஒருவரை பிரதம மந்திரி நியமிப்பது கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய செயலாகும்.
புதிய நிதிஅமைச்சரின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]வ[/dropcap]ருமான வரிகளைக் குறைத்தல், தொழில் துவங்குவோர்களுக்கு நீண்ட வரிவிலக்களித்தல், வாராமல் முடங்கிக் கிடக்கும் வங்கிகளின் சொத்துக்களைத் தீர்மானமாகப் பெறும் நடவடிக்கைகள், வங்கிகளின் மூலதனங்களை மாற்றி மேம்படுத்தல் மற்றும் கறுப்புப் பணத்தை மீட்க வித்தியாசமான செயல் திட்டங்கள் புரிதல் முதலியன. இந்த எல்லா செயல் முறைகளுமே – வேலை வாய்ப்புகள் ஆரோக்கியமாகப் பெருகவும், இரண்டு இலக்கப் பொருளாதார உயர்வு பெறவும் நிச்சயமாகவே வழிவகை செய்யும்.
புது நிதி அமைச்சர், வருமானவரியை பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வருவானவரி உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாய்க்கு உயர்த்த வேண்டும் அல்லது வருமான வரி வசூலிப்பையே டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கூறியது போல் நீக்கிவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கை, முதலீடு பெறுகவும் பயன்பாடு/நுகர்வளவு மேம்படவும் – சேமிப்பு விகிதத்தை கட்டாயம் அதிகரிக்கச் செய்யும். 90களில் ஐ.டி. நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சி இரண்டு காரணிகளைக் கொண்டது. மாநில அரசுகள் தாராளமாக நிலங்கள் ஒதுக்கின, மற்றும் ஒரு பத்து வருட வரிவிலக்கும் அளிக்கப்பட்டன. அதிலும், ‘இந்தியாவில் துவங்க வேண்டும்’ (Start in India) ‘இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்’ (Make in India) முதலான மோடி அரசின் முக்கிய லட்சியங்கள் நிறைவேற வரிவிலக்கு மிகவும் அவசியமாகும்.
முடங்கியுள்ள வங்கிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிகளின் மூலதன மேம்பாடு முதலிய முக்கியமான எல்லா விஷயங்களிலும் புது நிதியமைச்சர் சீர்திருத்தம் செய்யவேண்டும் – வேண்டுமென்றே கடனைத் திருப்பி செலுத்தாதவர்களைத் தண்டிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல், பொது நிறுவனங்களைத் தனியார் மயமாக்கலுக்கு பங்கு மார்க்கெட்டில் காலக்கெடு இடாமை (நேரம் குறிக்காமை) முதலியன – வேண்டுமென்றே வங்கிக்கடன் திருப்பி செலுத்தாதவர்களைப் பெயரிடவும் விளம்பரப்படுத்தவும் நிதியமைச்சகம் கொண்டுள்ள செயலற்ற தன்மை வரிசெலுத்துவோர் மற்றும் வாக்காளர்களை பெருத்த அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கி விட்டது. பங்கு மார்க்கெட்டின் நேரம் குறித்தல் என்பது பயனற்ற செயல் என்பது தொடர்ந்துவந்துள்ள நிதி அமைச்சர்கள் என்றுமே கற்காத பாடமாகிவிட்டது.
[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]இ[/dropcap]ந்திய எஃகு நிறுவனத்தின் பங்குகளை கடந்த வருடத்தில், நிதிஅமைச்சகம் 83 ரூபாய்க்கு விற்றது. இதில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 71 விழுக்காடுகளை வாங்கியது. ஆனால் இந்திய எஃகு நிறுவனத்தின் தற்போதைய பங்கோ ரூ 43 மட்டுமே விலை போகிறது. கிட்டத்தட்ட 50 விழுக்காடு நஷ்டத்திற்கே விற்கிறது. விளைவாக, பொது நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டுக் கழகத்தின் நஷ்டத்தில் நிதியமைச்சகம் தான் லாபம் அடைந்துள்ளது. பங்குச் சந்தையின் நிலவரத்தில் கெட்டிக்கார முதலீட்டாளர்கள் முட்டாளாவதில்லை, இந்தப் பாடத்தை நிதி அமைச்சக அரசுத் துறையினர் கற்க மறுக்கிறார்கள்.
கறுப்புப் பணத்தைக்கொண்டு வருவதில் உள்ள செயல்நோக்கு, கோழைத் தனமாகவே இருந்து வந்துள்ளது. இதைச் செய்ய அரசிற்குப் போதிய தீர்மானமோ செயல் திட்டமோ இல்லை என்ற நிலைப்பாடு தோன்றுகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களை தேசீய உடமையாக்கல், ஒத்துழைக்க மறுக்கும் வெளிநாடுகளிலுள்ள இந்திய நிறுவனங்களின் இந்திய செயல் நடப்புகளை முடக்குதல், ப்ரோ நோட்டுகளை ஒழித்தல் முதலான துரித நுட்பவழிமுறைகளைக் கையாளவேண்டும். ஆனால் இதற்கெல்லாம் நிதி அமைச்சகத்தில் ஒரு புதிய திறமையான நபர் அதிகார மேல்தட்டில் அமரவேண்டும்,
அடுத்த ஆண்டு பட்ஜட் தயாரித்தல் இந்த வருட அக்டோபரிலிருந்து துவங்கிவிடும். நாட்டுமக்களுக்கு புதிய பொருளாதார விசாலச் சிந்தனை வழங்கவும், அடுத்த பட்ஜெட் வருமுன் மிகப்பெருமளவிலான சீர்திருத்தங்கள் செய்ய அதிகார வர்க்கத்தைத் தயார் செய்யவும் வல்ல, ஒரு புதிய பொருளாதார அமைச்சரை பிரதமமந்திரி நரேந்திர மோடி நியமிப்பது காலத்தின் கட்டாயம். 2019ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு அமர வேண்டுமானால் அதை விரைவான, வெகுவான பொருளாதார முன்னேற்றமே உறுதி செய்யும். யார் நிதி அமைச்சராகத் தகுதியானவர் என்று பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
- இஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம் - May 3, 2018
- வங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்…. - November 24, 2016
- அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்ன? ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர். - November 2, 2016