யார் கடவுள்? எது கடவுள்? கடவுளை எப்படி கடவுள் என்று சொல்வது? இல்லை, கடவுள் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?
நாம் ஒவ்வொருவருக்கும் எப்படி விதவிதமாக ஆசைகளும் பிடிப்புகளும் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரும் ஒரு தெய்வ உருவை வழிப்பட்டுகிறோம்.
கடவுளின் குணங்கள் என்ன?
1. எல்லாம் வல்லவர் (omnipotent),
2. எங்கும் நிறைந்து உள்ளவர் (omnipresent),
3. எல்லாம் தெரிந்தவர் (omniscient).
சரியா?
1. இந்த உலகத்தில் நடப்பதை எல்லாவற்றையும் நடத்த வல்லவர்;
2. இந்த உலகத்தில் அவர் இல்லாத இடமே இல்லை;
3. இந்த உலகத்தில் அவருக்கு தெரியாதது எதுவும் இல்லை.
சரியா?
அப்பொழுது இந்த குணங்களில் எது குறைந்தாலும் அவர் கடவுள் இல்லை.
சரியா?
அப்பொழுது சாத்தான் என்றும், சாத்தானின் இருப்பிடம் என்றும், நரகம் என்றும், கடவுளுக்கு அப்பாற்பட்டு தனியாக இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அப்படிப்பட்ட கடவுள், அதாவது எங்கும் நிறைந்தவராக இல்லாதவர், எப்படி கடவுள் ஆக முடியும்? ஒன்று, சாத்தான், நரகம் என்றெல்லாம் இருக்கவே கூடாது, அப்படி இருந்தால் அதிலும் கடவுள் இருக்க வேண்டும்; அப்படி இல்லையெனில் அவர் கடவுளே அல்ல. ஏனெனில் கடவுள் எங்கும் நிறைந்துள்ளவர்.
அப்பொழுது கடவுள் நம்முள்ளும் நிறைந்து இருக்கிறார் அல்லவா? அப்படி இல்லாவிட்டால் அவர் கடவுளே இல்லையே.
வேண்டுமானால் முதலில் இருந்து திரும்ப படித்துப்பாருங்கள். இது ஒன்றும் ஒரு புதிர் அல்ல. ஒரு முறைக்கு பல முறை படித்துப்பாருங்கள்…
இதைத்தான் நம் முன்னோர்களும் சொன்னார்கள்: இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.
அதாவது நாம் இருப்பதே கடவுளுக்கு உள்ளே தான், நாம் கடவுளாளே தான் செய்யப்பட்டு உள்ளோம், இந்த உலகமே அப்படி தான். ஆகையால் இந்த உலகில் கடவுள் வேறு, உலகம் வேறு, நரகம் வேறு, சொர்க்கம் வேறு, சாத்தான் வேறு என்றே கிடையாது. இருப்பதெல்லாம் ஒன்றே. எப்படி நமக்கு கால், கை, மூக்கு என பலப்பல அங்கங்கள் இருந்தாலும் எல்லாம் மொத்தமாக நாம் ஒருவர் தான் என்று இருக்கிறோமோ அதை போல் எல்லாமே உலகில் ஒன்று தான், ஒரே கடவுளின் அங்கங்கள் தான்!
இதை தான் நம் முன்னோர்கள் ப்ரம்மம்/ பரப்ரம்மம் என்று சொன்னார்கள். சிலைகளும் படங்களும் – நமக்கு இது ஆழ்ந்து புரிந்து மனதில் நிலைப்பெறும் வரை – நமக்கு தியானம் செய்ய உதவும் தெய்வீக கருவிகளே.
நாம் ஒவ்வொருவருக்கும் எப்படி விதவிதமாக ஆசைகளும் பிடிப்புகளும் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரும் ஒரு தெய்வ உருவை வழிப்பட்டுகிறோம். அது தவறே இல்லை. நாம் எல்லோரும் பார்பதற்கு அச்சடித்ததுப் போல் ஒரே மாறியாகவா இருக்கிறோம்? ஆனால் எல்லோரும் எப்படி பிறக்கிறோம், பின்னர் எப்படி வாழ்ந்தாலும் இறக்கிறோமோ அதுபோல எந்த உருவத்தில் வழி பட்டாலும் ப்ரம்மதிற்கே போகிறோம் ப்ரம்மத்திலே கரைகிறோம், ப்ரம்மத்திலிருந்தே வருகிறோம், ப்ரம்மத்திலே வாழ்கிறோம்…
இதைத்தான் இந்து மதமும் போதிக்கிறது.
இப்பொழது சொல்லுங்கள் நீங்களும் கடவுள் தானே?
நம்மை சுற்றி இருப்பவர்களும் இருப்பவைகளும் அனைத்தும் கடவுள் தானே?
கடவுளை தவிர வேறு எதுவும் இல்லாதபோது எல்லாம் ஒன்றுதானே?
அப்பொழுது சாத்தான், நரகம், சொர்க்கம், எதிரி, நண்பன், கடவுள், மனிதன் என்றெல்லாம் எப்படி வேறுவேறாக இருக்க முடியும்? அப்படி வேறுபட்டு இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தனியாக இருந்தால் அது எங்கும் நிறைந்த கடவுளாகதே!
சிந்தியுங்கள்…
உங்களை கடவுளிடம் இருந்து வேறுபடுத்தி கடவுள் மேலே சொர்கத்தில் இருக்கிறார் என்று கூறி உங்களை மட்டப்படுத்தும், அடிமை படுத்தும் அன்னிய மதக் கோட்பாடுகள் உங்களுக்கு உள்ளேயே இருக்கும் தெய்வீகத்தை மறைத்து உங்களை ஏமாற்றி லாபம் ஈட்டுகின்றது!
நஷ்டம் யாருக்கு? உங்கள் கடவுள் தன்மையை உணராத உங்களுக்கு மட்டுமே நஷ்டம், அவர்களுக்கு அல்ல.
மேலும் விவரங்களுக்கு:
தமிழையும், தமிழ் பாரம்பரியத்தையும், இதைப்போன்ற உயர்ந்த இந்து மத தத்துவ உண்மைகளை அதர்மத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி வெளிக்கொணர ஐ. ஐ. டீ. சென்னையில் (IIT Madras) ஒரு சுவதேசி கல்வி மாநாடு நடக்க இருக்கிறது. அதன் தலைப்பு: தருமத்தின் பூமி தமிழ் நாடு. இந்த இணையதலத்தை பார்க்க – http://swadeshiindology.com/si-3/
(Many thanks to Shri Krishnamoorthy for reviewing the draft.)
- Priyanka Vadra continues the illegal abuse of Gandhi’s name and legacy - March 19, 2019
- Is secularism the other side of genocide and is it thus unconstitutional? - November 10, 2018
- Is Yogi’s government inadvertently putting the Kumbh Mela at subversive risk by Breaking India forces at Harvard et al? - October 17, 2018
So simple and entire concept put in nutshell Thank you Muraliji God bless you Truly service to Humanity
Very good article Muraliji…super.. detailed..keep it up..best wishes..
Excellent Article Dr. Murali.
Hats off, Great article and information. Please keep posting more like this. Thanks