சாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு?

ஒரே வழியில் வந்த பங்காளிகள் எப்படி வேறு சாதி என்று ஆக முடியும்?

பிறப்பாள் சாதி இருந்திருக்க இயலாத ஒன்று
பிறப்பால் சாதி இருந்திருக்க இயலாத ஒன்று

சாதியும் வெள்ளைக்கார ஆட்சியும்

சாதி: நாம் ஒவ்வொருவருக்கும் இரண்டே (2) பெற்றோர்கள் தான். அதைப்போல் நான்கே (4) பாட்டன்-பாட்டிகள். அதைப்போல் எட்டே (8) கொள்ளுப்பாட்டன்-பாட்டிகள். அதாவது ஒவ்வொரு தலைமுறை பின்னேப் போகப்போக இரண்டில் ஆரம்பித்து ஒவ்வொரு தலைமுறைக்கும் இரண்டால் பெருக்கிக்கொண்டே போகவேண்டும். எளிமையான கணக்கு தான். இதை கணிதத்தில் சுருக்கமாக 2^n (அதில் n = எத்தானையாவது தலைமுறைக்கு முன்னால்) என்று எழுதுவார்கள்.

இப்படியே கணக்கிட்டால் பத்தே தலைமுறைக்கு முன்னால் நமக்கு 1024 மூதாதையர்களும், 20 தலைமுறைக்கு முன்னால் 1,048,576 மூதாதையர்கள் வரும் (பத்து லட்சத்தி நாற்பத்தி எட்டாயிரத்தி ஐநூற்றி எழபத்தியாறு). இது கணித ரீதியான உண்மை.

இதற்க்கு ஆங்கிலத்தில் pedigree collapse என்று பெயர். “அதாவது பிறப்பால் சாதி என்று இருந்திருக்க இயலாத ஒன்று!”

இப்பொழுது இந்தியா வில் 130 கோடி மக்கள். அப்பொழுது ஒவ்வொருவருடைய 20 தலைமுறைக்கு முன்னால் இருந்த மூதாதையர்களைக் கூட்டினால் பூலோகத்தில் இதுவரை வாழ்ந்த எல்லா மனித எண்ணிக்கையையும் பல மடங்கு மீறும்! இது எப்படி சாத்தியம்? மக்கள் தொகை பெருகிக்கொண்டே தானே போகும். அக்காலத்தில் சனத்தொகை மிக குறைவாக இருந்ததே!

“கணக்கு அப்பொழுது பொய் சொல்கிறதா?”

இல்லை.

கணக்கின் படி 20 தலைமுறைக்கும் முன்னால் நாம் அனைவரும் பங்காளிகள்! இதற்கு ஆங்கிலத்தில் pedigree collapse என்று பெயர். “அதாவது பிறப்பால் சாதிகள் என்று இருந்திருக்க இயலாத ஒன்று!” இது கணித ரீதியான நிருபணம்.

“ஒரே வழியில் வந்த பங்காளிகள் எப்படி வேறு சாதியாக முடியும்?”

நம் வரலாற்று “நிபுணர்களும்”, ஆங்கிலேய கிறிஸ்தவ அரசும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிடாமல் இன்றும் கையாளும் நம் அரசியல்வாதிகள் தான் பொய் சொல்கிறார்கள்.

    References:

  1. Chang JT. Recent common ancestors of all present-day individuals. Adv. Appl. Prob. 1999: 31, 1002–1026.

  2. Rhode DLT, Olson S, Chang JT. Modelling the recent common ancestry of all living humans. Nature. 2004: 431, 562–566.


Note:

1.Text in Blue points to additional data on the topic.
2.The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

A medic and a graduate of the University of Cambridge, England,involved in inter-disciplinary research for the inculcation of a scientific rigour in the outdatedfields of humanities: putting "science"
into social sciences.
Murali KV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here